அம்பாறை கல்முனையில் பெண்களின் உரிமைகள் தொடர்பில் கருத்தரங்கு!!

நல்ல தலைமைத்துவத்தினூடாக பெண்களின் உரிமைகள், பொருளாதாரம், சுகாதாரத்தினை மேம்படுத்தும் கருத்தரங்கு இன்று அம்பாறை கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில், அம்பாறை பெண்கள் நிலைய முகாமையாளர்கள் ஆர்.லோகிதா மற்றும் யூ.எல்.ஹபீலா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் வளவாளராக கலந்துகொண்டு மனித உரிமைகள் பற்றி தெளிவுபடுத்தியிருந்தார்.

நெருங்கிவரும் சனாதிபதி தேர்தலில் வாக்குரிமையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என கூறுகையில், சுயாதீனமான நீதித்துறை இயங்குமேயானால் அடிமட்ட மக்களின் பிச்சினைகள் அரசியல் ரீதியாக உயர்மட்டத்தில் பேசப்படும். நாட்டின் முதல் குடிமகனாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்றவராக இருத்தல் வேண்டும். தேர்தல்கள் உரிய காலத்திற்குள் சுதந்திரமாக நடைபெறவேண்டும் அப்போதுதான் நியாத்தன்மையோடு தேர்தல்களில் இடம்பெறும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு, மனித உரிமைகள் பற்றிய ஆய்வாளர் சாரிக்கா மாலதி, சட்டத்தரணிகள், மத தலைவர்கள் ,மகளீர் அமைப்பினர், பெண் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!