வவுனியாவில் விழிப்புணர்வு செயலமர்வு!!

வவுனியாவில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் நடத்தப்பட்டுள்ளது.

டிரான்ஸ் பேரன்சி இன்டநெசனல் சிறிலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில், வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் அலுவலகத்தில், இன்று காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை, செயலமர்வு இடம்பெற்றது.

தகவல் உரிமைச்சட்டம் என்றால் என்ன? இதன் மூலம் சமூகத்தில் இருள் போர்வைக்குள் இருக்கும் விடயத்திற்கு, எவ்வாறு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம் என, பல விடயங்களையும் விளக்கங்களையும், வளவாளர்கள் வழங்கியுள்ளனர்.

அத்துடன், இலங்கை அரசின் அமைச்சு ஒன்றிடமிருந்து, ஒரு குறித்த அபிவிருத்தி திட்டமொன்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் பெறுமதி, அதனால் நடந்தேறிய அபிவிருத்தி பற்றிய விபரங்களை கேட்டுப் பெறும் உரிமை, மக்களுக்கு சட்ட ரீதியாக தகவல்களை வழங்க வேண்டும் என்ற பல விளக்கங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இதன் போது, வளவாளர்களாக டிரான்ஸ் பேரன்சி இன்டநெசனல் சிறிலங்கா நிறுவன உத்தியோகத்தர்களான எம்.எச்.எம்.மக்கீன் மற்றும் வினோதினி பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!