வவுனியாவில், புகையிரதம் மோதி குடும்பஸ்தர் பலி!!

வவுனியா பரசங்குளம் இந்தியன் வீட்டுதிட்ட பகுதியில், புகையிரதம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம், வவுனியா பரசங்குளம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பரசங்குளம் இந்தியன் வீட்டுதிட்டப் பகுதியை சேர்ந்த, 43 வயதுடைய வடிவேல் விக்னேஸ்வரன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

விபத்து காரணமாக, சில மணி நேர தாமதத்தின் பின்னர், புகையிரதம் கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம், புளியங்குளம் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!