கிளி, அக்கராயனில் வீதி மற்றும் பாலத்தை சீர்செய்து தருமாறு மக்கள் கோரிக்கை!!

கிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் அமைந்துள்ள பாலத்தின், புனரமைப்பு பணிகள் நிறைவடையாத நிலையில், மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

முறிகண்டியில் இருந்து அக்கராயன் ஊடாக, மன்னார் – யாழ் வீதியையும், ஏ9 வீதியையும் இணைக்கும் பிரதான வீதியாக குறித்த வீதி காணப்படுகின்றது.

அக்கராயன் வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள வீதியில் காணப்படும் முக்கிய பாலங்களில் ஒன்று, கடந்த 7 மாதங்களுக்கு மேலாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், வீதி அபிவிருத்தி தொடர்பில், மக்கள் காட்சி பதாதைகள் அங்கு காட்சிப்படுத்தப்படவில்லை எனவும், வீதியின் ஒப்பந்த காலம், பெறுமதி உள்ளிட்ட விடயங்களை மக்களுக்கு காட்சிப்படுத்தப்படவில்லை எனவும், வீதி ஊடான போக்குவரத்து பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும், மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வீதி புனரமைப்பு பணிகள், இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில், மக்களின் அன்றாட போக்குவரத்திற்காக, தற்காலிக பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கு உரிய முறையில் மண் அணைக்கப்படவில்லை எனவும், இதன் காரணமாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், முறிகண்டி – அக்கராயன் வீதியின் ஊடாக, அக்கராயன், வன்னேரிக்குளம் ஆகிய வைத்தியசாலைகளுக்கு, பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதனால், வீதி கடுமையாக சேதம் அடைந்துள்ளமையினால், மக்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதுடன், மாற்றுவழிப்பாதையும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

இதன் காரணமாக, மக்களுக்கான போக்குவரத்தை சீர் செய்து தருமாறு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!