வேன் விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் பலி

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் நான்காம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ..

வேன் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் 3 வயதுடைய குழந்தை, குழந்தையின் தாய் மற்றும் ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் அதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மடு தேவாலயத்திற்கு யாத்திரை சென்ற குழுவினரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!