தௌபீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுடைய விளக்கமறியல் நீடிப்பு!!

ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர், தேசிய தௌபீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல் நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் குறித்த சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, குறித்த சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்தார்.

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஆறு மாதங்களை கடந்துள்ள நிலையிலும் தொடர்ந்தும் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 64 பேரில் முன்னர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், ஏனையவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர். சந்தேகநபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!