கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஒவ்வொரு மாகாணங்களுக்குமான தனித்தனி விஞ்ஞாபனங்களை தொகுத்துள்ள நிலையில் நாளை பொது விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

அந்தவகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்குமான விஞ்ஞாபனங்கள் கல்வி, விவசாயம் சுற்றுலா, வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் அபிவிருத்தி என்பவற்றினை அடிப்படையாக கொண்டு இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழுவினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நாளை பத்தரமுல்லை – நெலும் மாவத்தை பொதுஜன பெரமுன அலுவலத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!