கிளிநொச்சியில், முதியவர்களுக்கு கௌரவிப்பு     

கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தினால், ஏற்பாடு செயயப்பட்ட சர்வதேச முதியோர்தின விழா இன்று நடைபெற்றுள்ளது.

வடமாகாண சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச முதியோர் தின விழா இன்று கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் வே.தபேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள், கலந்து கொண்டதுடன், சர்வதேச முதியோர் தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலர்பிரிவுகளில் முதியோர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய முதியோருக்கான பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

அத்தோடு சிறப்பாக சேவையாற்றிய முதியவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் சமூக சேவை திணைக்கள உத்தியோதர்கள்,முதியோர்கள்,மதத்தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!