மின்னேரியாவில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு   

அனுராதபுரம் – மின்னேரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பேருந்தின் சாரதியொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் 60க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்த மேலதிக விசாரணகைளை மின்னேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!