ஏப்ரல் தாக்குதல் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவால் எட்டு சிபாரிசுகள்

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான பொறுப்பினை தட்டிக்கழிக்கும் நபராக தனிநபரினை பெயரிடமுடியாது என பாராளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிய சில தரப்பினர் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் தாக்குதலை தடுப்பதற்கு தவறியவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோர் இதில் இடம்பெற்றிருப்பதாக தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது.

தெரிவுக்குழுவினர் தமது இறுதி அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக பாராளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தினர்.

இதன்போது பொறுப்பை தட்டிக்கழிக்கும் தரப்பினராக தனிநபரை பெயரிட முடியாது என்றும் தெரிவுக்குழுவினர் சுட்டிக்காட்டினர்.

தேவைப்படும் பட்சத்தில் இந்த அறிக்கையை சபாநாயகர் மூலம் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்க முடியும் எனவும், உலகில் நிலவும் பயங்கரவாத்ததுடன் நமது நாட்டில் நிலவும் சட்ட விதிகள் அதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட வேண்டும் எனவும், குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்தோடு, எமது மக்கள் இது தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதனால் இந்த விசேட தெரிவுக்குழு அதற்கான நடவடிக்கை மேற்கொண்டது.

எவருக்கும் தண்டனை விதிப்பது குழுவின் நோக்கமல்ல என்றும், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவுகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவிக்கவில்லை.

இந்த அறிக்கையின் ஊடாக எட்டு சிபார்சுகளை முன்வைத்துள்ளதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டார்.

பாதுகாப்பு மற்றும் இராணுவ சேவைகளை மீளமைத்தல், நிதித் துறையை கண்காணிக்கும் வலுவான முறைமையை ஸ்தாபித்தல், மத ரீதியான கடும்போக்குவாதத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்தல், ஊடகங்களைக் கட்டுப்படுத்தி போலிச் செய்திகள் பரவுவதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புக் கூறுவதை உறுதிப்படுத்தல், அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில் கல்வி முறைமையை மீளமைத்தல் என்பன குறித்த எட்டு சிபார்சுகளாகும்.

ஒரு குழுவென்ற வகையில் எவரையும் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாததன் காரணமாக சிபார்சுகளையும், ஆலோசனைகளையும் முன்வைத்ததாக பிரதி சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!