புத்தளம் மக்களின்குப்பை பிரச்சினைகளுக்கு தீர்வு: சஜித்

புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் குப்பை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச,

‘பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக அண்மையில் நான் புத்தளத்திற்கு வந்த போது புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் குப்பை பிரச்சினைகள் தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கடந்த காலங்களில் புத்தளத்தில் சீமெந்து தொழிற்சாலை, நுரைச்சோலை அனல் மின்சாரம் என்பன இங்கு அமைக்கப்பட்டதன் மூலம் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

அதுபோல இந்த குப்பை பிரச்சினையும் தமக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் பாரிய சவாலாக அமைந்து விடுமோ என்று மக்கள் அச்சமடைகிறார்கள்.

எனவே, எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நான் ஜனாதிபதியாக தெரிவானதும், புத்தளம் அறுவக்காடு பகுதிக்கு நேரில் விஜயம் செய்து திண்மக் கழிவு கற்றல் முகாமைத்துவ பிரிவை கண்காணித்து, புத்தளம் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன் என பொறுப்புணர்வுடன் கூறிக்கொள்கிறேன்.

அதுபோல, புத்தளத்தில் சுற்றுலாத்துறை, மீன்பிடித் தொழில், இறால் முகாமைத்துவம் என்பனவற்றை மேலும் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வதற்கு விஷேட ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!