நுவரெலியா – கினிகத்தேனையில் லொறி குடைசாய்ந்து விபத்து: இருவர் காயம்

நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிராதான வீதியில் பிட்டவல பகுதியில் நேற்று மாலை லொறி ஒன்று 15 அடி பள்ளத்திற்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

கினிகத்தேனை பகுதியிலிருந்து அவிசாவளை பகுதியினை நோக்கிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக, கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் லொறியின் சாரதியும், உதவியாளரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில், மேலதிக சிகிச்சைக்காக லொறியின் சாரதி நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹட்டன் கொழும்பு பிராதான வீதியில் பயணித்த பேருந்து ஒன்றுக்கு வழிவிடும் வகையில், லொறிச்சாரதி செயற்பட்டபோதே குறித்த விபத்து சம்பவித்ததாக கினிகத்தேனை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!