டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலாவது இடம்

டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலாவது இடத்தில் தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றியதன் மூலம் கூடுதலாக 5 புள்ளிகளை பெற்ற இந்தியா மொத்தம் 119 புள்ளிகளுடன் இருக்கிறது. அதே சமயம் தொடரை பறிகொடுத்ததால் 7 புள்ளிகளை இழந்துள்ள தென்ஆப்பிரிக்கா 102 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. நியூசிலாந்து 2-வது இடத்திலும் (109 புள்ளி), இங்கிலாந்து 3-வது இடத்திலும் (104 புள்ளி), ஆஸ்திரேலியா 5-வது இடத்திலும் (99 புள்ளி) உள்ளன.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது இந்த தொடரில் பின்னர் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதன்படி துடுப்பாட்ட தரவரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவரை விட 1 புள்ளி வித்தியாசத்தில் பின்தங்கி இருந்த இந்திய அணி தலைவர் விராட் கோலி 2-வது இடத்தில் தொடருகிறார்.

இந்த டெஸ்டில் 212 ஓட்டங்களை குவித்து இந்திய வீரர் ரோகித் சர்மா 10-வது இடத்தை பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன்பாக 44-வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா இந்த தொடரில் மொத்தம் 529 ரன்கள் குவித்ததன் மூலம் முன்னேற்றத்தை அடைந்துள்ளார்

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள். காயத்தால் தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரை தவற விட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 3-ல் இருந்து 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் . கடைசி டெஸ்டில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 வைத்த இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் .

டெஸ்ட் ஆல் ரவுண்டர்களின் தரவரிசையில் வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் முதலிடமும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2-வது இடமும் வகிக்கிறார்கள். அஸ்வின் ஒரு இடம் பின்தங்கி 6-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார் குறிப்பிடத்தக்கது . (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!