அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில்

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இன்று அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோ சடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

கனியவள அபிவிருத்தி அமைச்சுக்காக பெற்றோல் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சி வழங்கவே அவர் குறித்த ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தம்மிக்க ரணதுங்கவும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சி வழங்கியுள்ளார்.

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தியதில் மோசடி இடம்பெற்றதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய பிரதமர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது . (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!