வவுனியா கூமாங்குளத்தில் திறன் வகுப்பறை திறப்பு.

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில், திறன் வகுப்பறை திறப்பு விழா, வித்தியாலய அதிபர் ச.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்தில், முதல் தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்ட திறன் வகுப்பறையை, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திறந்து வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக, வவுனியா தெற்கு கல்வி வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மரியநாயகம், வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலய பிரதி அதிபர் ம.ஜெகதீஸ்வரன், பண்டாரிகுளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துஷார, வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் மா.அதிர்ஷ்ட செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக, பாடசாலை வசதிப்படுத்துனர் ஆங்கில ஆசிரிய ஆலோசகர் திருமதி உ.சூரியச்செல்வன், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி செ.விஜயகாந்தன், சமுர்த்தி உத்தியோகத்தர், பெற்றோர்கள், மாணவர்கள். ஆசிரியர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில், பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகளால் சின்னம் சூட்டி வைக்கப்பட்டது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!