யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி 

இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள, சமாசத்தின் முன்பாக ஒன்றுகூடிய மக்கள், அங்கிருந்து பேரணியாக, யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் அலுவலகம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று, மகஜர் கையளித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த மக்கள், மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு சென்றனர்.

அங்கு பொலிஸாரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிமறிக்கப்பட்டதுடன், ஒரு சிலர் இந்திய துணைத்தூதரகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!