ஜனாதிபதி தேர்தல் போட்டியில் விலக தயார்-சிவாஜிலிங்கம்

ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலக இரண்டு நிபந்தனைகளை முன்வந்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம்.

கொழும்பில் இலங்கை மன்ற கல்லூரியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

13 கோரிக்கைகளை முன்வைத்துள்ள ஐந்து தமிழ் கட்சிகளும் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென்று தீர்மானத்துக்கு வரும் பட்சத்தில் தான் போட்டியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரில் ஒருவர் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பகிரங்கமாக இணக்கப்பாட்டை வெளிப்படுத்துவார்கள் எனில் தான் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!