விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது   

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் போன்று மீண்டும் இடம்பெறாதிருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவை தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கை 200 பக்கங்களை கொண்டுள்ளதாக தாக்குதல்கள் குறித்து ஆராயும் விசேட நாடாளுமன்றக் குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின் ஊடாக அரசியல்வாதிகள் சிலருக்கும், அதிகாரிகள் சிலருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் ஊடக அறிக்கைகளில் எந்தவித உண்மையும் இல்லையென்று பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காக இந்த விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவில்லை என்றும் ஆனந்த குமாரசிறி கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதல்களுக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை நாடாளுமன்றத்தினால் பரிந்துரைக்க முடியாது என்றும், இதற்கான அதிகாரம் நீதிமன்றத்துக்கே உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!