குருநாகலில் ஐ.தே.க காரியலாயம் திறப்பு     

சஜித் பிரேமதாச மக்களின் அபிமானத்தைப் பெற்ற தலைவர் மட்டுமல்ல, கிராம மட்டங்களில் பேசப்படும் தலைவர் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து குருநாகல் தேர்தல் தொகுதியில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசிய கட்சிக் காரியலாயத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

குருநாகல் நகரில் ஐக்கிய தேசிய கட்சிக் காரியலாயத்தை திறந்துவைக்கும் நிகழ்வு இராஜாங்க அமைச்சர் ஆசோக அபேசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவித்த குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம்,

சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்வதற்கு குருநாகல் தேர்தல் தொகுதியில் மட்டுமல்ல குருநாகல் மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளையும் வென்றெடுப்பதற்காக நாம் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவெல, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!