களு கங்கையின் நீர் மட்டம் அவதான மட்டத்தை அடைந்துள்ளது

நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் அத்தனகல ஓயா, துனமலை பகுதியில் பெருக்கெடுத்துள்ளமையால் அந்த பகுதியில் சிறிதளவு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதேபோல் களுகங்கையின் நீர் மட்டமும் அவதான மட்டத்தை அடைந்துள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள ஏனைய பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!