பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் கைது .

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் அவரது மகள் மரியம் நவாஸ் நிதிமோசடி வழக்கில் தேசிய பொறுப்புடமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப்பின் மருமகனும், மரியம் நவாசின் கணவருமான முகமது சப்தாரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை இழிவுபடுத்தும் விதமாக பேசிய வழக்கில் முகமது சப்தார் கைது செய்யப்பட்டதாக லாகூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

ஊழல் வழக்கு விசாரணைக்காக கடந்த 13ம் திகதி முகமது சப்தார் நீதிமன்றம் ஆஜரானபோது, ராணுவ தளபதி மற்றும்உயர் நீதிமன்றம் நீதிபதிகள் குறித்து தரக்குறைவான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முகமது சப்தார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் .(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!