ஜப்பான் அரசரின் முடிசூட்டு விழாவில் ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன

ஜப்பான் நருஹிதோ அரசரின் முடிசூட்டு விழா 180 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று டோக்கியோ நகரின் இம்பீரியல் மாளிகையில் நடைப்பெயற்றுள்ளது.

அரச தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டிருந்ததுடன், பிரித்தானிய இளவரசர், பெல்ஜியத்தின் பிலிப் இளவரசர், சுவீடன் நாட்டு மன்னர், கட்டாரின் அமீர் உள்ளிட்ட விசேட அதிதிகளும் 2,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நருஹிதோ அரசரின் மசாக்கோ அரிசியுடன் அரச உடை அணிந்து இம்பீரியல் மாளிகைக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

ஜப்பான் அரசராக ஆட்சி புரிந்த அகிஹிதோ அரசர் 30 வருடங்களுக்கு பின் கடந்த மே மாதம் தனது பதவியை இராஜினாமம் செய்தார். 1817இன் பின் பதவியை இராஜினாமா செய்த முதல் ஜப்பானிய பேரரசர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2019 மே மாதம் 01ஆம் திகதி முடிக்குரிய இளவரசரான நருஹிதோ ஜப்பானின் 126 ஆவது அரசராக நியமிக்கப்பட்டார்.

டோக்கியோ நகரில் அமைந்துள்ள அரச மாளிகையில் இடம்பெற்ற விழாவினை தொடர்ந்து நருஹிதோ அரசர் மற்றும் அவரது மனைவியாகிய மசாக்கோ அரசி ஆகிய இருவரும் உத்தியோகபூர்வமாக பதவியை பொறுப்பேற்றுள்ளார்கள் என உலகிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!