கஜேந்திரகுமார் யாருக்காக செயற்பாடுகிறார்? : சுரேஸ்

5 தமிழ்க் கட்சிகளும், இந்த வாரத்தில் சந்தித்து பேச தீர்மானித்துள்ளதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய பரப்பில் இருக்கக் கூடிய ஐந்து கட்சிகள் இணைந்த 13 கோரிக்கைகளை ஐனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களது கட்சிகளிடமும் முன்வைத்திருந்தன.

இந்த 13 கோரிக்கைகளையும் உருவாக்குவதில் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட்,ஈபீஆர்எல்எப், தமிழ் மக்கள் கூட்டணி உட்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய ஆறு கட்சிகள் இணைந்து தான் ஆவணங்களைத் தயார் செய்திருந்தோம்.

இதில் இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் இந்த ஆவணத்திலுள்ள அனைத்து விடங்களையும் முன்னணியும் ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனாலும் அவர்கள் கூறி ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு விடயம் இந்த ஆவணத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

ஆகவே 13 கோரிக்கைகள் அடங்கிய இந்த ஆவணத்தில் ஐந்து கட்சிகள் கையொப்பமிட்டு ஏற்றுக் கொண்டிருந்தாலும் மக்கள் முன்னணியையும் உள்ளடக்கியதாக ஆறு கட்சிகளைக் கொண்ட ஆவணனமாகத் தான் இந்த ஆவணம் இருக்கின்றது.

குறிப்பாக இந்த ஆவணத்தை இறுதிப்படுத்துகின்ற நேரத்தில் மக்கள் முன்னணி தனது பல கருத்துக்களையும் திருத்தங்களையும் சொல்லியிருந்தது. அந்தத் திருத்தங்கள் யாவும் இதில் உள்ளடக்கப்பட்டும் இருந்தது.

அவ்வாறான சூழ்நிலையில் தற்போது இந்த ஐந்து கட்சிகளும் இந்திய அரசாங்கம் சொல்வதைக் கேட்டுத் தான் இந்த வேலைகளைச் செய்த முடித்திருக்கின்றன என்றும்; இந்திய அரசாங்கத்தினுடைய ஏnஐன்டுகளாக இவர்கள் செயற்படுகின்றார்கள் என்று கூறுவதுமான இவர்களது கருத்தக்களில் பலத்த சந்தேகங்கள் எழுகின்றது.

ஏனென்றால் இந்த ஆவணத்தில் வந்திருக்கின்ற விடயங்களில் பல திருத்தங்களைச் சொன்னவர்கள் இவர்கள் தான். ஆகவே இவர்கள் யார் சொல்லி இந்தத் திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. ஆதில் விசேசமாக இந்தியா சொல்லித் தான் இந்தத் திருத்தங்களைக் கொண்டு வந்தார்களா? ஏன்ற கேள்வி உள்ளது. ஏனென்றால் இந்தத் திருத்தங்கள் உள்ளடங்கிய ஆவணத்தைத் தான் இப்போது இவர்கள் விமர்சிக்க முற்படுகின்றார்கள்.

ஆகவே இந்தத் திருத்தங்களைச் சொன்னதால் அவர்களுக்கும் இந்த ஆவணத்தில் முழுமையான பங்கு பற்றல் இருக்கின்றது. அந்த வகையில் அவர்களும் ஏற்றுக் கொண்ட இந்த ஆவணத்தை ஆதரித்து கையெழுத்து வைத்தவர்களை இந்திய அரசின் ஏnஐன்டுகள் என்று சொல்லி அவர்கள் பேசுகின்றனர்.

உண்மையில் இந்தியா என்று சொன்னாலே பிரச்சனை என்ற விதமான நோய் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஏனெனில் எல்லா விடயங்களையும் பார்க்கின்ற போதும் எடுத்த எடுப்பில் உடனடியாகவே அது இந்திய ஏnஐன்டுகள் செய்கின்ற வேலை அல்லது அவ்வாறானவர்களுடைய கருத்து அல்லது அவர்கள் சொன்னதை இவர்கள் செய்கின்றார்கள் என்று சொல்லிச் சொன்னால் நான் கேட்கின்றேன் நீங்கள் சீனாவினுடைய ஏnஐன்டுகாளக இருக்கின்றீர்களா?

ஏனெனில் உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் தொடர்ச்சியாகவே இந்தியாவை சாடி வருகின்றீர்கள். அதிலும் நீங்களும் சேர்ந்து செய்கின்ற வேலைகளுக்கு இந்திய முத்திரையைக் குத்துவது ஏன் என்பது எனக்கு விளங்கவில்லை. ஆகவே கNஐந்திரகுமார் அவர்களுக்கு மிக மோசமான வகையில் ஒருவிதமான வருத்தம் நிச்சயமாக இருக்கின்றதாகவே நான் நம்புகின்றேன்.

ஆறு கட்சிகளும் ஏற்றுக் கொண்ட விடயங்கள் தான் ஆவணத்திலும் இருக்கிறது. அவ்வாறான சூழ்நிலையில் சிங்களக் கட்சிகளிடமும் சிங்கள வேட்பாளர்களிடமும் இது தொடர்பான கருத்துக்களைக் கேட்கக் கூடிய சூழ்நிலையில் இதற்கு எதிராகப் பேச முனைவது என்பதும் இதனை விமர்சிப்பதென்பதும் என்ன அடிப்படையில் இதனைச் செய்ய அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பது விளங்கவில்லை.

தங்களுக்குள் தேவையற்ற முரண்பாடுகளை அவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த முரண்பாடுகளைக் குறித்து அவர்கள் யோசிக்க வெண்டும். தாங்கள் சொல்வது குறித்த உள்ளுக்குள்ளேயே பல முரண்பாடுகள் இருக்கின்றன என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆகவே அந்த முரண்பாடுகளை கைவிட்டு என்ன வழியில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று பார்க்க வேண்டும். வெறும் சித்தார்ந்தங்களையும் தத்துவங்களையும் பேசிக் கொண்டிருப்பதனூடாக இதனைத் தீர்க்க முடியாது.

இதற்கு சரியான பொறிமுறைகளை வழிமுறைகளைக் கண்டு கொள்ள வேண்டும். இயன்றவரை அதற்கான சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. எடுக்கப்பட்ட சில முயற்சிகளை குழப்பத் தேவையில்லை. ஆனால் அந்த முயற்சிகள் அத்தனையும் சரியாக வர வேண்டுமென்றும் அல்ல. அதில் பல பிரச்சனைகளும் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே கNஐந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியினரும் இந்தப் பிரச்சனைகளினுடைய முக்கியத்தவங்களைப் புரிந்து கொண்டு ஊடகங்களுடன் பேசுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இதே வேளை ஐந்து கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை சிங்களக் கடும் போக்குடையவர்கள் இனவாதத் கண்கொண்டு பார்க்கின்றார்கள். இந்தக் கோரிக்கைகள் என்பது ஏதோ தனிநாட்டுக் கோரிக்கையாகப் பார்த்து அதனை வைத்து இனவாத ரீதியான பிரச்சாரங்களை முன்னெடுப்பதென்பது முழு முட்டாள்தனமாகும்.

இந்தத் தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தமிழின விரோத பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள். ஆகவே தமிழ் கட்சிகளின் இந்த 13 ஆம்சக் கோரிக்கைகக்கும் தனிநாட்டுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. இது முட்டாள் தனமான வாதம் அந்த வாதத்தை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கிறோம். என தெரிவித்துள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!