கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் – ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி!!

கனடாவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி, 62.3 வீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

2015 தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியிலேயே, லிபரல் கட்சி சார்பில் மீண்டும் ஹரி ஆனந்தசங்கரி போட்டியிட்ட நிலையில், 21 ஆயிரத்து 241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சியின் பொப்பி சிங் 20.1 வீத வாக்குகளையே பெற்றுள்ளார்.

புதிய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு 11.4 வீதமும், கிறீன் கட்சி வேட்பாளருக்கு 4.6 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

தேர்தல் இறுதி முடிவுகளின்படி லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 31 ஆயிரத்து 339 வாக்குகளையும், கொன்சர்வேட்டிவ்; கட்சி சார்பாக போட்டியிட்ட பொப்பி சிங் 10 ஆயிரத்து 88 வாக்குகளையும் புதிய ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட கிங்ஸ்லி வோக் 5 ஆயிரத்து 735 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!