மக்களின் எதிர்ப்பார்ப்பு கொண்ட ஆட்சியை உருவாக்க வேண்டும்-அனுர

மக்களின் எதிர்ப்பார்ப்பையும் ஆட்சியாளர்களின் எதிர்ப்பார்ப்பையும் இணைக்கும் ஆட்சியினை இந்நாட்டில் உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி நகரில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

71 ஆண்டுகாலம் பொருளாதார வளர்ச்சியடைய செய்வது தொடர்பில் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை மக்கள் கேட்டுக் கொண்டிருந்ததார்கள் அதனால் இதுவரையில் எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 53 பேர் தற்போதைய அரசாங்கத்திலும் இருப்பதாக  தெரிவித்துள்ளார்.

மக்கள் வாக்குகளை வழங்கி ஆட்சியை மாற்றியதாக நினைத்துக் கொண்டிருந்தாலும் மீண்டும் அதே நிலைமை தொடர்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!