இலங்கை The Grey List நீக்கம்

பண மோசடி மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி உதவி வழங்குதல் ஆகியவற்றை தடுப்பது குறித்த உலக மயமாக்கல் கொள்கை ஒன்றை வகுக்கும் நிதி செயற்குழுவின் இணக்க பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

The Grey List எனப்படும் ஆவணம் இந்த நிதி செயற்குழுவின் இணக்க பட்டியலில் இருந்து இலங்கையை செயற்குழுவின் கூட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பண மோசடி மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் பலவீனமான நாடாக கருதி இலங்கை அந்த நிதிப் செயற்குழுவின் இணக்கப் பட்டியலில் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது .

இந்த செயற்பாடுகளில் இலங்கை இழைத்த தவறுகளை திருத்திக் கொள்வதற்கும் அந்த நிதி செயற்குழு கால அவகாசம் வழங்கியிருந்தது.

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இடம்பெற்ற குறித்த செயற்குழுவின் அமர்வில் இலங்கை தனது செயற்பாட்டு திட்டத்தை முடித்து விட்டதாக கருதி அதனடிப்படையில் இந்த மாத இறுதியில் அதன் முன்னேற்ற அறிக்கை தொடர்பில் ஆய்வுக் குழுவில் விவாதிக்கப்பட்டது.

இதற்கமைய இலங்கையின் செயற்பாடுகளில் திருப்தி கொள்ளாத குறித்த குழு நிதி செயற்குழுவின் இணக்க பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க முடிவு செய்துள்ளது.

இதற்கு குறித்த செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிதி கட்டமைப்பு மீதான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!