அத்தியாவசிய பொருட்கள் சில விலை குறைப்பு

தற்போது 450 – 500 ரூபாவிற்குள்ள காய்ந்த மிளகாயின் விலையை குறைப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் காய்ந்த மிளகாய் கிலோவிற்கான வரி 25 ரூபாவில் இருந்து 5 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இறக்குமதி செய்யப்படும் மீன் கிலோவிற்கான வரி 100 ரூபாவில் இருந்து 25 ரூபாவாக குறைப்பதற்கு வாழ்க்கை செலவுக்கான குழு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

அத்துடன் கோழி மற்றும் முட்டை விலையை கட்டுப்படுத்துவதற்காக அவற்றை இறக்குமதி செய்வதற்கும் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்க களஞ்சியசாலையில் உள்ள 48,000 மெட்ரிக் தொன் நெல்லை சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் உதவியுடன் அரிசியாக மாற்றி சதொச ஊடாக, நாடு முழுவது சம்பா அரிசி ஒரு கிலோ 85 ரூபாவிற்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!