அரச உத்தியோகத்தர்களுக்கான ஆடை விவகாரம் தொடர்பில் வௌியிடப்பட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை சம்பந்தமாக பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கின்றனார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மாலை மீண்டும் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி தற்போது பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கின்றனார்.(சே)