ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாயவிற்கு ஆதராக யாழில் பிரச்சாரம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவிற்;கு ஆதரவு திரட்டும் வகையில் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தேர்தல் பிரச்சாரம் வடமராட்சி – கொற்றாவத்தை பகுதியில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸின் தலைமையில் இடம்பெற்றது.

பிரச்சாரக் கூட்டத்தில் லண்டன் மாநகர சபை உறுப்பினர் பரமலிங்கம் விவேகானந்தன் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

கோட்டபாய ராஜபக்சவிற்கு ஆதரவாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இளைஞர், யுவதிகள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!