மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பான செயலமர்வு

பாடசாலை மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கம் சகவாழ்வு மற்றும் வன்முறையற்ற தொடர்பாடல் தொடர்பான தெளிவூட்டல் மற்றும் கருத்துப்பகிர்வு நிகழ்வு நேற்று மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜோசப் நயன் தலைமையில் செயலமர்வு இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன, மத ரீதியான முரண்பாடுகளை கடந்து நல்லிணக்கத்தை சமுதாய ரீதியில் கட்டியெழுப்பும் நோக்கில், ‘ஒன்று கூடுவோம்’ இலங்கை அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த செயலமர்வு நடாத்தப்பட்டுவருகிறது.

அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் நல்லிணக்கம் தொடர்பான கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன், நிலைமாறுகால நீதி மற்றும் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் மத இன முறுகள் தொடர்பாகவும் அவற்றின் ஊடாக கற்றுக் கொண்ட பாடங்கள் தொடர்பான காணொளிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

குறித்த நிகழ்வில் 200 மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் மாவட்ட இனைப்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!