மேய்ச்சல் நிலத்தை தாருங்கள்: மன்னார் கால்நடை வளர்ப்போர் கோரிக்கை

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்கள், தமது கால் நடைகளுக்கான உரிய மேய்ச்சல் நிலம் வழங்கப்படவில்லை எனவும் இதனால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேய்ச்சல் நிலத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், நானாட்டான் பிரதேச செயலகத்தில் கால் நடை வளர்ப்பாளர்களுக்கும், பிரதேச செயலாளருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது.

இதன் போது நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் கலந்துரையாடலுக்குச் சென்றிருந்தபோது, தேர்தல் காலப் பகுதியைச் சுட்டிக்காட்டி கலந்துரையாடல் திடீர் என இரத்துச் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கலந்துரையாடலுக்கு சென்றிருந்த கால்நடைவளர்ப்பாளர்கள் தமக்கு உரிய மேய்ச்சல் நிலம்,உடனடியாக வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தினர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!