அமிர்தகழி கிராம சேவை பிரிவின் மட்டிக்களி பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  – சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின்  பணிப்புரைக்கு அமைவாக நாடாளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு அமைய  மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக டெங்கு தாக்கம் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில்  டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் டெங்கு தாக்கம் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அமிர்தகழி கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவின் மட்டிக்களி பகுதியில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இந்த டெங்கு ஒழிப்பு சிரமதான பணியில் அமிர்தகழி கிராம சேவை பிரிவின் கிராம சேவை உத்தியோகத்தர்  வி .விபுலானந்தன் , மாமாங்கம் திரட்டு பிரிவு சுகாதார பரிசோதகர் எஸ் .கிரிஷாந்த் , அபிவிருத்தி உத்தியோகத்தர்  எஸ் . விஜயகுமார் , அமிர்தகழி அன்னதான பணி குழு உறுப்பினர் கே நடராஜா மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் ,,மாதர் அபிவிருத்தி சங்கம் , டெங்கு ஒழிப்பு குழு , வீடமைப்பு கிராமிய குழு , முதியோர் சங்கம் , சமுர்த்தி செயலணி குழு  ,சிவில் ,பாதுகாப்பு குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

 

 

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!