பாலத்துவ சபையின் நிரத்தர அங்கத்தர்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!!

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மறைக்கோட்ட பாலத்துவ சபையின் நிரத்தர அங்கத்தர்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும், விசேட திருப்பலியும் மட்டக்களப்பு மறை மாவட்ட  ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் மட்டக்களப்பு  தாண்டவன்வெளி  தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மறை மாவட்ட பாலத்துவ சபையின் இயக்குனர் அருட்தந்தை அன்டனி டிலிமா அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மறைக்கோட்ட பாலத்துவ சபையின் நிரத்தர அங்கத்தர்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வில் தேசிய பாலத்துவ சபையின் தேசிய இயக்குனர் அருட்தந்தை பெசில் ரோகான் அடிகளார் கலந்துகொண்டு பாலத்துவ சபையின் நிரத்தர அங்கத்தர்வர்களுக்கான சின்னங்களை வழங்கி வைத்தார் .

நடைபெற்ற பாலத்துவ சபையின் நிரத்தர அங்கத்தர்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்விலும், திருப்பலியிலும் , மறைக்கோட்ட பாலத்துவ சபையின் அங்கத்தர்வர்களுக்கான மாணவர்கள், மறை ஆசிரியர்கள் , அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!