கடின சீவர புண்ணிய  கனிமம் நடும் நிகழ்வு   மட்டக்களப்பில் நடைபெற்றது!!

கடந்த யுத்தகாலத்தில் முழுமையாக அழிந்துபோன விகாரை மீண்டும் நிர்மாணிக்கப்பட்டு அதற்கான தாது கோபத்திற்கான கடின சீவர புண்ணிய  கனிமம் நடும் புண்ணிய நிகழ்வு  மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரை விகாராதிபதி பட்ட பொல ஸ்ரீ குனானந்த நாயக்க தேரரின் தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம  சமய தலைவராக கலந்துகொண்ட சியம் மகா மல்வத்து சார்பின் நாயக்க தேரராகிய சத்தம்ம  அக்கமணா பண்டித சக்கரவர்த்தி நியன் கொட விசிதசிரி நாயக்க தேரரின் முன்னிலையில் கனிமம் நடும் புண்ணிய நிகழ்வு நடைபெற்றது .

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த நிலைய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரையின் கனிமம் நடும் நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் , விமானப்படை , கடற்படை , ஹன்குரன்கெத்த உபாசக சங்க புண்ணியவான்கள் , மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராம மக்கள் கலந்துகொண்டனர்

 

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!