பெண்கள் உரிமை தொடர்பான உடன்படிக்கையில் கைசாத்திட்டார் சஜித்!!

உயர்வான ஆற்றலுடன் ஒன்றாய் முன்னேறுவோம் என்னும் பெண்கள் உரிமை தொடர்பான உடன்படிக்கையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கைச்சாத்திட்டுள்ளார்.

கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டு அரங்கில் குறித்தநிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சின் அமைச்சர்கள் பாராளுமன்றஉறுப்பினர்கள், கொழும்பு மாநகரசபை முதல்வர், மற்றும் பெண்கள் அமைப்புகளை சார்ந்த பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இங்குஉரையாற்றிய ஜனாதிபதிவேட்பாளர் சஜித் பிராமதாச.

நாங்கள் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 25விகித இட ஒதிக்கீடை பெண்களுக்காக வழங்கியுள்ளோம்.

அதேபோல பாராளுமன்றத்திற்குள்ளும் நாங்கள் அதனைஉறிப்படுத்துவோம், இந்த நாட்டு நிறுவங்களில் பணிபுரியும் பெண்களில் பலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள்.

அதேபோல ஆடை தொழிற்சாலைகளில் பணிப்புரியும் பெண்களில் 57 விகிதமானவர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள், அண்மையை கணிப்பித்தின் படி 12 இலட்சம் குடும்பங்கள் பெண்களின் தலைமைத்துவத்தை கொண்டுள்ளது.

இவர்களில் அதிகமானவர்கள் வறுமைக்குகோட்டின் கீழ் உள்ளவர்கள். நாங்கள் எங்களால் முடிந்தவரை அவர்களுக்கான தேவைகளை பூர்த்திசெய்யவேண்டும்
எங்களுடைஉடன்படிக்கய் சாதாரணமாதொன்றல்ல அல்ல அதில் இருக்கக்கூடிய பெண்கள் தொடர்பான அனைத்து விடையங்களும் நடைமுறைப்படுத்தப்படும்.

பெண்களுக்கான சம உரிமை முழுமையாக வழங்கப்படும் அவர்களுக்கான சம உரிமை நிலைநாட்டப்படும்
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுடைய குறை நிறைகளை வைத்துக்கொண்டு நிராகரிக்கப்பட விடமாட்டேன், அதுபோல எங்கள் நாட்டின் பெண்களுக்கு நான் ஒரு வாக்குறுதியை வழங்குகின்றேன், நாட்டில் என்ன நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தினாலும் அதில் பெண்களின் பங்கு முக்கியமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!