தலைமன்னார் பகுதியில் இந்தியர்கள் ஐவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் தமிழகத்தில் இருந்து நாட்டுக்குள் பிரவேசிக்க முற்பட்ட ஐவர் தலைமன்னார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர் என தலைமன்னார் கடற்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

29, 30, 34, 37 மற்றும் 49 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்கள் பேசாலை, யாழ்ப்பாணம், தலைமன்னார் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!