சஜித்திற்கு ஆதரவானவர்கள் கோட்டா பக்கம் வருவார்கள் – அளுத்கமகே!!

புதிய தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமேதாசவிற்கு ஆதரவு வழங்குகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர், சிறிலங்கா பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஒன்றிணைய உள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே,

‘ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமேதாசவிற்கு ஆதரவு வழங்குகின்ற சிலர், கோட்டபாய ராஜபக்வின் பிரச்சார மேடையில் ஒன்றினைய உள்ளதாக, அறிந்து கொண்ட ஜக்கிய தேசிய கட்சி அவர்களுடைய அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி வருகிறது.

அமைச்சர் மலிக் சமரவிக்ரம, மத்திய வங்கியில் உள்ள பணத்தினை பெற்று, எமது கட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் மாகாணசபை உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பணம் வழங்கி ஜக்கிய தேசிய கட்சியின் பக்கம் அழைப்பு விடுக்கிறார்.

ஒரு பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு ஜந்து இலட்சம் ரூபா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் மத்திய வங்கியில் கொள்ளையிடபட்ட பணம் தற்பொழுது வெளியில் வந்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரகட்சி மற்றும் சிறிலங்கா பெரமுன கட்சியில் உள்ள உறுப்பினர்களின் பின்னால் மலிக்சமரவிக்ரம சென்று இவ்வளவு தொகை பணம் தருகிறேன் எமது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குமாறு கோருகிறார்.

இதற்கு முன்பு கூட குருநாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஜம்பது மில்லியன் ருபாய் பணம் வழங்கி எமது பக்கம் வருமாறு கோரியிருக்கிறார். இது போன்ற நடவடிக்கையினை உடனடியாக நிறுத்தவேண்டும.; மத்திய வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் தற்பொழுது பாரிய அளவில் செலவு செய்யப்படுகிறது.

அமைச்சர் மலிக் சமரவீர உள்ளிட்ட, ஜக்கிய தேசிய கட்சிக்கு ஒன்றை கூறுகிறோம்.

மத்திய வங்கியில் இருந்து பணத்தினை எடுத்து வந்தால் பரவாயில்லை. மத்திய வங்கியின் கொள்ளைகாரர் என குற்றம் சுமத்தப்படுவார்.
தேர்தலுக்கு பின்பு ஜக்கிய தேசிய கட்சி இதற்கு பதில் வழங்கவும் தயாராக இருக்க வேண்டும்’. என குறிப்பிட்டுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!