நல்லாட்சியின் கொள்கைகளை விஜயதாசவே காட்டிக் கொடுத்தார்- இந்துனில்!!

விஜேதாச ராஜபக்ச அடிக்கடி கட்சிகளை மாற்றுபவர் அவர்தான் நல்லாட்சியின் கொள்கைகளை காட்டிக்கொடுத்தார் என பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில தெரிவித்துள்ளர்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஊடகங்கள் பரவலாக பேசிய விடையங்கள்தான் விஜேதாச ராஜபக்க்ஸ கட்சிமாறிவிட்டார் என்று, அதில் எந்த புதுமையும் இல்லை, அவர் ஒவ்வொரு ஆட்சிகாலத்திலும் ஒவ்வொரு இடத்தில் இருந்தவர், அவர் மஹிந்த ராஜபக்சவிடம் இருந்து எங்களுடைய பக்கம் வந்தது தேசிய பிரச்சினைக்காக அல்ல, அவருக்கு கபினெட் அமைச்சு ஒன்று வழங்கப்படவில்லை என்பதற்காக.

நாங்கள் அவரை நீதி அமைச்சராக நியமித்தோம் ஆனால் அவர் அதை வைத்துக்கொண்டு வழக்குகளை விசாரிக்காமல் பிற்போட்டர், சரியாக இயங்கவிடவில்லை அதனால் நாங்கள் அவரிடம் இருந்து அமைச்சை எடுத்தோம், அவர் கடந்த காலங்களில் எங்களுடன் இருக்கவில்லை.

51 ஒருநாள் ஆட்சிமாற்றத்தின் போது அவர் மஹிந்த ராஜபக்சவின் பக்கம் இருந்தார், அவருடைய முழு ஆதரவை அங்குதான் வழங்கினார், அதைத்தான் சிலர் பெரிதாக பேசினார்கள் அவர் எங்களுடைய கட்சியில் இருந்து விலகியது கடந்தவருடம் என்றும் தெரிவித்தார்.

நீதியான பல வழக்குகளை இல்லாமல் செய்த்தது அவர்தான், அதனால் சட்டம் சரியாக இயங்கவில்லை இப்போது இவை அனைத்துக்கும் எங்களுக்கு புரிந்துவிட்டது, மக்களின் ஆதரவு இல்லாதவர்கள் எங்களைவிட்டு செல்வதில் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!