நாட்டை ஆள்வதற்கு சரியான தலைவர் சஜித் – அமில தேரர்!!

அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒருவரே நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் எனவும், அவர் சஜித் பிரேமதாசவாக இருக்க வேண்டும் எனவும், தம்பர அமிலதேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று சிவில்சமூக மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்த ஊடகசந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்ததெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எங்களுடைய நாட்டை ஆள்வதற்கு இலங்கையர் ஒருவர் தேவை, அவர் எந்தவித இன, மத, பேதம் இன்றி மக்களை அரவணைக்க கூடியவராக இருக்கவேண்டும்.

அதே போல சிறந்த சர்வதேசக் கொள்கை இருக்க வேண்டும், எதைகேட்டாலும் சரியாக பதில் சொல்லக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும்,

எங்களுக்கு காலாவதியான வேட்பாளர் தேவையில்லை, அதேபோல இங்கு வாழக்கூடிய மக்கள் அனைவரும் ஒன்றாக வாழவேண்டும், எந்த சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு சிக்கல் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது, சஜித் பிரேமதாச போன்றவர்கள் இந்த நாட்டை சரியாக ஆளும் திறமை கொண்டவர்கள், மக்களுடன் எப்போதும் ஒன்றாக நிற்கக்கூடியவர், ஒரு நாளைக்கு 6 கூட்டங்கைளை நடத்துகின்றார். நாட்டை ஆள சரியான தலைவர் இவர் தான்.

எந்தவொரு ஜனாதிபதிக்கும் நல்ல தூரநோக்கு இருக்கவேண்டும், சிறந்தகொள்கை இருக்கவேண்டும் அப்படி இருந்தால் தான் எங்களுடைய நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லமுடியும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மக்களுக்கு பல சேவைகளை செய்தவர், எப்போது பழமையை பற்றி பேசவேண்டும் அவைதான் ஒரு மனிதனை முன்னோக்கி கொண்டு செல்லும்.

சிலர் இன்று சில விடையங்களை பற்றி பேச முடியாது என்கிறார்கள், அது மக்களுக்கு கசப்பான நினைவுகள கொண்டுவரும். என தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!