முல்லைத்தீவில் சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!!

முல்லைத்தீவு நெடுங்கேணி மாடுச்சந்தி வெள்ளைப்பிள்ளையார் ஆலய கற்பகா அறநெறிப்பாடசாலையில், சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கலந்து கொண்டிருந்ததுடன், கௌரவ விருந்தினராக
புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சத்தியசீலன் கலந்துகொண்டார்.

இதன்போது, 2019ம் ஆண்டு தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டியில் 59 கிலோ நிறைப்பிரிவில் முதலாமிடத்தைப் பெற்று தங்கம் வென்ற தண்டுவான் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி. செ.ரிசபா மற்றும் மாணவி தங்கம் வெல்வதற்காக சிறந்த வழிகாட்டியாக செயற்பட்ட பாடசாலை அதிபர் கு.பஞ்சலிங்கம், மாணவியை சிறந்த முறையில் பயிற்றுவித்த ஆசிரியர்களான குணாளன், செ.வினோதன் ஆகியோரும், 2019 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சிறப்புச்சித்தியடைந்த தண்டுவான் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களான இசைப்பிரியன், நிஸ்மிதன், கம்சனா, அலைகல்லுப்போட்டகுளம் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மாணவி அகழிசை ஆகிய சாதனை மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!