யாழ் போதனா வைத்தியசாலையில், இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 ஆவது நினைவு தினம்     

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 32ஆவது நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கைக்கு இந்திய அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தபோது 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையிலிருந்த பணியாளர்கள் 21 பேரை சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எக்ஸ்ரே பிரிவில் நினைவு கூரப்பட்டது.

இந் நினைவு தின நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், வைத்தியசாலை பணியாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!