பருத்தித்துறை, ஹாட்லிக் கல்லூரியின் கல்விக் கண்காட்சி-2019

மாணவர்களின் ஆற்றல்களை பாடசாலை மட்டத்தின் வெளிக்கொணரும் வகையில், ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் கல்விக் கண்காட்சி இன்றைய தினம் இரண்டாவது நாளாக சிறப்புற இடம்பெற்றுவருகின்றது.

 

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 2019ஆம் ஆண்டுக்கான கல்விக் கண்காட்சி இரண்டு நாட்களைக் கொண்டதாக ஒழுங்கு செய்யப்பட்டு, நேற்றைய தினம், வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் இரவீந்திரன் மற்றும் வடக்கு மாகாண விஞ்ஞான பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரால் இணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இறுதி நாளான இன்றைய தினம் சிறப்பாக கண்காட்சி இடம்பெற்றுவரும் நிலையில், வடமராட்சி வலயப் பாடசாலை மாணவர்களும் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!