சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விசேட ஏற்பாடு

சாதாரண தரப் பரீட்சையில் செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் அடுத்த வாரம் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணபித்துள்ள மாணவர்கள் திணைக்கத்திற்கு விஜயம் செய்தும் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒருநாள் சேவை

யின் கீழ் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது. அலுவலக நேரங்களில் மாணவர்களுக்காக 0115-226-115 என்ற அவசர தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்பு கொண்டு தமது தேவைகளை தெரிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!