இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாங்கள் தாக்கப்பட்டதாக இந்தியா பொய் உரைக்கின்றது, தூதரக அதிகாரிகளை அழைத்துச் சென்று இதனை நேரில் காட்டத்தயார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியதாக வெளியான தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், ‘எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டதாக இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்களை பாகிஸ்தான் திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

இந்த முகாம்கள் பற்றிய தகவல்களை இந்தியாவிடம் கேட்குமாறு ஐ.நா. பாதுகாப்பு சபையின்; 5 நிரந்தர உறுப்பு நாடுகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியாவின் பொய்யை அம்பலப்படுத்த ஐ.நா. பாதுகாப்பு சபையின்; 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்துச்சென்று காட்டத்தயாராக இருக்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி, இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியாவை பாகிஸ்தான் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!