திருமலையில், 24ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாடு     

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இளைஞர் மாநாடு நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று கிண்ணியா பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!