யாழ்,தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், தனிநாயகம் அடிகளாரின் நினைவரங்கம்     

யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நினைவரங்கம் நேற்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் கலைத்தூது கலையகத்தில் யாழ்ப்பாண தமிழ்ச் சங்க உப தலைவர் அருட்பணி ஜெறோ தலைமையில் நினைவரங்கம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில், தனிநாயகம் முற்றத்தில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு,நினைவரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நினைவரங்க நிகழ்வில், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் தமிழ் வாழ்த்து இசைத்தனர்.

தொடர்ந்து, யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

தனிநாயகம் அடிகளாரின் நினைவரங்க வரவேற்புரையினை, யாழ்ப்பாணம் தமிழச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர், நா.வை.மகேந்திரராஜா ஆற்றினார்.

தலைமையுரையையும், தொடக்கவுரையையும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் ச.லலீசன் ஆற்றினார்.

நினைவுப் பேருரையை ‘இயற்கையால் எழிலுறும் இலக்கியங்களும் இலக்கியங்களால் உயிர்ப்புறும் இயற்கையும்’ எனும் தலைப்பில் சியன தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் துணைவியூர் சி.கேசவன் ஆற்றியிருந்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!