நுவரெலியா மாவட்டத்திற்கு பிரதேச செயலகங்கள் அதிகரிக்கபடும்: சஜித் வாக்குறுதி

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தன்னை வெற்றிபெறச் செய்தால், மூன்று மாத காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்திற்கான பிரதேச செயலகங்கள் அதிகரிக்கபடுமென புதிய தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமேதாச வாக்குறுதி அளித்துள்ளார்.

ஹட்டனில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு வாக்குறிதியை வழங்கியுள்ளார்.

‘நான் ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது எறும்பை போன்று விரைவாக எடுத்துவிடுவேன்.

நான் ஒரு தீர்மானத்தை எடுக்கின்ற போது நன்றாக யோசித்து முடிவெடுப்பேன்.

எடுக்கின்ற முடிவின் மூலம் அதற்கான தீர்மானத்தையும் வழங்குவேன்.

அதேபோல் இந்த நுவரெலியா மாவட்டத்தில் வாழுகின்ற மக்களின் அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தபடும்.

இன்று எமது அரசாங்கத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிறந்த அமைச்சர்கள் உள்ளார்கள்.

அவர்கள் என்றும் பணத்திற்காகவும், போதைபொருளுக்காகவும் மக்களை காட்டி கொடுக்கமாட்டார்கள்.

எந்நேரமும் மலையக மக்களின் அபிவிருத்தி தொடர்பாகத்தான் எம்மோடு கலந்துரையாடுவார்கள்.

இது போன்ற அமைச்சர்கள் தான் மலையகத்திற்கு தேவை.

மலையகத்தில் வாழுகின்ற ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வருமானத்தை பெற்றுகொள்ள கூடிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் மக்கள் அடிமைகளாக வாழமுடியாது.

அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தபட வேண்டும்.

புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற போது அதனை முடியாது என கூறுபவர்களே அதிகமாக
காணப்படுகிறார்கள்.

நம் அனைவருக்கும் தெரியும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மக்கள் எமது நாட்டிற்காக பாரிய சேவையினை செய்து வருகிறார்கள்.

தேயிலை சபைக்கு பாரிய இலாபத்தினை பெற்று கொடுப்பதும் இந்ந தோட்ட தொழிலாளர்கள் தான்.

இரத்தம் மற்றும் வியர்வையை சிந்தி தேயிலை ஏற்றுமதியினை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லுகின்ற குறைந்த அளவு சம்பளத்தினை பெறுகின்ற மக்கள் இந்த தோட்ட தொழிலாளர்கள்.

எனது தந்தை ரனசிங்க பிரேமேதாச மலையகத்தில் உள்ள 12 இலட்சம் மக்களுக்கு பிரஜாவுரிமையை பெற்று கொடுத்தார்.

அதேபோல் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1500 ருபா வேதனத்தை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

என்னை பொறுத்தவரையில் பார்ப்போம், இல்லை, இயலாது போன்ற வார்த்தைகளை எந்நாலும் நான் கூறியது இல்லை.

எனது அரசாங்கத்தில் இது போன்ற வார்த்தைகளை நான் வெளியேற்றிவிடுவேன்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி இந்த நாட்டை என்னிடம் இந்த நாட்டு மக்கள் ஒப்படைக்கும் போது, எதிர்காலத்தில் ஒரு புதிய நாடாக நான் மாற்றி அமைப்பேன்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுகொடுக்கும் ஒரு அரசாங்கமாக, மக்களின் துக்கம் வேதனைகளை அறிய கூடிய அரசாங்கமாக மாற்றியமைக்கப்படும்.

இன்று சிலர் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் எப்படியாவது இந்த ஜனாதிபதி தேர்தலை வென்று நாட்டை சொந்தமாக்கி கொண்டு நாட்டில் உள்ள அனைத்து சொத்துக்களையும் அவர்களது குடும்பங்களுக்கு பிரித்து கொடுக்க எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

தம்பி ஜனாதிபதி, அண்ணன் பிரதமர், போன்ற பதவிகளை ஏற்று கொண்டு குடும்ப ஆட்சியினை கொண்டுவர முயலுகின்றனர் இதுவா மக்களின் எதிர்பார்ப்பு.’…

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!