தோட்டத்தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் சம்பளம்-சஜித்

700 ரூபாய் வேதனத்தை உயர்த்தி நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் வழங்குவேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொத்மலை நகர மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சார கூட்டத்தின் பொது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேயிலை தொழிலை முன்டனெடுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாதாந்தம் 14,000 ரூபாவை சம்பளமாக பெறுகின்றனர். அப்படி என்றால் நாள் ஒன்றுக்கு 700 ரூபாவை பெறுகின்றனர். ஆனால் 4 பேர் வசிக்கும் ஒரு குடும்பத்தில் 50 தொடக்கம் 55,000 ரூபா வரை அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல்ல தேவைப்படுவதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது,இந்த நிலையில் நான் ஆட்சிக்கு வந்தால் உங்களை வழி நடத்தும் திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் சார்பாக நாள் ஒன்றுக்கு 1500 ரூபாவை சம்பமாக வழங்க உறுதி வழங்குகின்றேன் என தெரிவித்துள்ளார்

350 ரூபாய்க்கு உரம் வழங்குவதாக எதிர் தரப்பு தெரிவிக்கின்றனர். நான் விவசாயிகளை வெவ்வேறாக பிரிக்காது அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாகவே உரங்களை வழங்குவேன் தெரிவித்துள்ளார் .

மேலும் மறைந்த தலைவர் காமினி திசாநாயக்காவின் பிறந்த தினத்தில் கொத்மலை நகரில் மக்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். காமினி திசாநாயக்க அவர்களின் புதல்வர்களான நவீன் திசாநாயக்க, மயாந்த தி

சாநாயக்க ஆகியோரின் சக்தியில் புதிய நாட்டை உருவாக்குவேன் என தெரிவித்தார்.

நாட்டுக்கு தேவை தற்போது எறும்பை போல் பயணித்து நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க கூடிய தலைவராக செயல்படுபவரே எனக்கு வயது 52. நவீன் திசாநாயக்க வயது 50. நாங்கள் இந்த நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க கூடிய ஆட்டம் இழக்காதவர்களாக இருக்கின்றோம். சிலர் 80 வயதை எட்டியுள்ளனர். அவர்கள் தாமாகவே முன்வந்து வீட்டுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.(சே)

நாட்டை புதிய பாதையில் கொண்டு சென்று அபிவிருத்தியை செய்வதற்கான வயது எம்மிடம் உண்டு. கலாவதியாகியவர்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக போட்டி போடுவது அர்த்தமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!