வல்வெட்டித்துறையில் விழிப்புணர்வு நடைபவனி!

உலக கடல் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி நல்லொழுக்க குழுவின் ஏற்பாட்டில், விழிப்புணர்வு நடைபவனி நடத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை மகளிர் கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி, வல்வெட்டித்துறை நகர சபையை சென்றடைந்து நிறைவு பெற்றது.

கடற்கரையை சுத்தமாக வைத்திருப்போம், பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவோம் எனும் கோரிக்கையை உள்ளடக்கி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, நடைபவனி நடத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் தலைமையில் இடம்பெற்ற நடைபவனியில், அப்பகுதி மக்கள் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்வியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!