8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து ஒன்று கண்டுபிடிப்பு

8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இதுவே உலகின் பழமையான முத்து என தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் .

மறவா தீவில் பல ஆண்டுகளாக தொல்பொருள் ஆய்வுகள் நடத்திவரும் நிலையில் . கற்சிற்பங்கள், பீங்கான் பொருட்கள், ஓடு மற்றும் கற்களால் செய்யப்பட்ட மணிகள் என ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில் பழமையான முத்து ஒன்றும் சமீபத்தில் கிடைத்தது. உலகின்

பழமையான முத்து என கருதப்படும் இந்த இயற்கை முத்து சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. குறிப்பாக கி.மு.5800 முதல் 5600 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

‘அபுதாபி முத்து’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த முத்து, அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு 30ம் திகதி முதல் பொதுமக்களின் பார்வைக்கு  விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!